Thursday, December 26, 2013

சித்தர்கள் மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

கரும்பின் நன்மைகள்........!

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை:

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்:

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

சிறுநீரக கற்கள்:

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

நீரிழிவுக்கு கரும்பு:

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்:

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி:

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

புற்றுநோய்:

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நீர் வறட்சி:

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

பிரண்டை பயன்....!

தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக்க்ம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும்.சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.

1.இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.

2.பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி,அடிபட்ட வீக்கம்,எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.

3.கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி,சீதபேதி,நுரைத்த பச்சை பேதி தீரும்.

4.பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்,வாய்நாற்றம்,உதடு,நாக்கு வெடிப்பு தீரும்.

5.பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள்,தீராத நாட்பட்ட வயிற்றுவலி,மூலம்,மூல அரிப்பு,மலத்துடன் சீழ்,இரத்தம் வருதல் தீரும்.

6.சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம்,தாது இழப்பு ஆகியவை தீரும்.

7.பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.

இவ்வளவு குணநலங்கள் கொண்ட பிரண்டையின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது வருத்தமான ஒன்று.

கோதுமை மருத்துவக் குணங்கள்


* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.

* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.

சிறந்த சித்தமருத்துவக் குறிப்புகள்



உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.

தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.

சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.

புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.

உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.

கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.

நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.

அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.

கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.

செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.

கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.

எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.

தேனின் மருத்துவக் குணங்கள்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.

கண் பார்வைக்கு:

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு:

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா:

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.

இரத்த கொதிப்பு:

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு:

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்:


அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

இஞ்சியின் பயன்கள்......!

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

Wednesday, December 25, 2013

உளுந்து பயன்

உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

உளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.

உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.

விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்.

Tuesday, December 24, 2013

பயறு வகைகளின் மருத்துவ குணங்கள்

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.

பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.

எச்சரிக்கை: ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.

முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்’ அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பச்சைப் பயறு
எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

கொண்டைக்கடலை
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer) போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மொச்சைப் பயறு
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.

காராமணி
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

கொள்ளு
எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ராஜ்மா
தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

பட்டாணி
காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.

சோயா
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.

துவரைப் பயறு
உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:


*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :-
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ்.

இந்த கிழங்கு நிஜத்தில் தாவரத்தின் வேர்ப் பகுதியாகும். இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகை. சிவப்பு, சாம்பல், வெள்ளை, கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் விளைகிறது. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.

எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும்.

கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது

Monday, December 23, 2013

இலந்தைப் பழம் பயன்..!

இலந்தைப் பழம்..!

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.

இந்த இதழில் இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல்

எல்லோரும் வாங்கும் பழம்..

இது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்

இந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..

இன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.

Tamil - Elandhai

English - Chinese date

Telugu - Regi pandu

Malayalam - Ilanta

Hindi - pitni-ber

Sanskrit - Kola

Botanical name - Ziziphus mauritiana

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி

மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த

உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்

இலந்தை நெறுங்கனியை யெண்

- அகத்தியர் குணபாடம்

நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

எலும்புகள் வலுப்பெற

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.

காய்கறிகளின் மருத்துவ குணங்கள்:

வாழைப்பூ:

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள்
நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும்
புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது.
இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை
பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல்
அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:

இரும்புச்சத்து,பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும்
குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது
நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள்
நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக்
கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:

வைட்டமின்ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன.
வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு
மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து
உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்:

புரதம்,கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து
வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:

புரதம்,கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை
உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ:

கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்:

புரதம்,நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்::

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக்
கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு:

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்

கடுகு பயன்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்பிளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோளிணி எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன

வேப்பிலையின் மருத்துவப் பயன்


வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் சாறில் 10 அரிசி ,நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் குணமாகும்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும். வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிடடு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.

சீரகத்தின் பயன்கள்

தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க ¬வத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்றுதின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்¬ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம்மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமு¬ற தடுப்புமுறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்தநோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்தஅழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்
.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாகசாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிதுசீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும்வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத்தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்துசாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க:

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு:

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

எடை குறையச்செய்யும் உணவுகள்!!

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்குகொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது

பருக்களை விரட்ட ஐஸ் கட்டியை எப்படி உபயோக படுத்த வேண்டும் !!

பருக்களை விரட்ட ஐஸ் கட்டியை எப்படி உபயோக படுத்த வேண்டும் !!

முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். பிம்பிளை போக்குவதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலவற்றால் பிம்பிள்கள் கரும்புள்ளிகள் போன்று தோன்றும்.

ஆகவே அவை ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களான கடுகு, கிராம்பு, சந்தனக்கட்டை அல்லது மூல்தானி மெட்டி ஆகியவற்றை பயன்படுத்தினால், அந்த பிம்பிள்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போய்விடும். ஆனால் அதுவே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால், ஒரே நாளில் அவை குறைந்துவிடும். அத்தகைய ஐஸ் கட்டியை பயன்படுத்தும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்..

• ஸ்டெப் 1- முதலில் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து நன்கு கழுவ வேண்டும். ஆனால் முகத்தில் இருக்கும் பிம்பிளை மட்டும் தேய்த்துவிட வேண்டாம். முகத்தை வெதுவெதுப்பான நீரால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி லேசாக கழுவ வேண்டும்.

• ஸ்டெப் 2- மூல்தானி மெட்டியை, சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் பிம்பிள்கள் மீது மட்டும் தடவலாம். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிளையும் குறைத்துவிடும்.

• ஸ்டெப் 3- இந்த ஃபேஸ் பேக் போட்டு கழுவியவுடன், 5 நிமிடத்திற்கு ஐஸ் கட்டிகளை வைத்து, பிம்பிள் உள்ள இடத்தின் மீது தேய்க்கவும். இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை எந்த ஒரு ஃபேஸ் பேக் இல்லாமலும், தேய்க்கலாம்.

அதிலும் ஐஸ் கட்டிகளை வைத்து, தேய்க்கும் போது, குறைந்தது 2 ஐஸ் கட்டிகளையாவது பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சி பிம்பிளில் உள்ள அனைத்தையும் ஒரே நாளில் உருக்கிவிடும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை, இவ்வாறு தேய்த்தால், பிம்பிள் முற்றிலும் போய்விடும்.

• ஸ்டெப் 4- ஐஸ் மசாஜ் செய்தப் பின்னர், சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். அதனால் பிம்பிளில் உள்ள சீல் முற்றிலும் துணியில் வந்துவிடும். பிறகு கண்ணாடியைப் பாருங்கள், பிம்பிள் குறைந்து முகம் அழகாக இருக்கும். பிம்பிள் வராமல் இருக்க வேண்டுமென்றால் தினமும் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். வறட்சியின் காரணமாகத் தான் முகத்தில் பிம்பிள், முகப்பரு ஏற்படுகின்றன.

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் உணவுகள் !!

இன்றைய அவசர உலகில் பலரால் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இதற்கு காரணம் அதிகப்படியான மன அழுத்தம், போதிய தூக்கம் இல்லாமை மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாதது போன்றவை தான். தற்பொழுது வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை அடைய வேண்டுமென்று, பலர் கடினமாக உழைப்பதுண்டு. அப்படி உழைத்தால் மட்டும் போதுமா என்ன? துணையுடன் காதல் வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இன்றைய ஆண்களால் காதல் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை.

இருப்பினும், இந்த பிரச்சனைக்கு வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், பாலுணர்ச்சியை தூண்டும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும். அதுமட்டுமின்றி, இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பது என்பது கடினமாக ஒன்றாகிவிட்ட நிலையில், பாலுணர்ச்சி குறைவாக இருந்து, குழந்தைப் பெற முயற்சித்தும் முடியாவிட்டால், பின் எவ்வளவு தான் சம்பாதித்தாலும், அது வேஸ்ட் தான்.

ஆகவே பாலுணர்ச்சியை தூண்டும் உணவுகளை தவறாமல் சேர்த்து வந்தால், ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தி அதிகரிப்பதோடு, பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, காதல் வாழ்க்கையை நன்கு சந்தோஷமாக அனுபவிப்பதுடன், நல்ல அழகான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

சரி, இப்போது காதல் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தைப் பெற உதவும் உணவுகளைப் பார்ப்போம்.

வெங்காயம்
வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது லேசாகும். இப்படி லேசானால், இரத்தத்தில் அளவு அதிகரித்து, உடலில் சீராக பாய்ந்து, பாலுணர்ச்சியை நீண்ட நேரம் தக்க வைக்கும்.

பாஸ்தா
பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால், அது காதல் வாழ்க்கையின் போது உடலில் எனர்ஜியை நீட்டிக்கும். எனவே பாஸ்தா சமைக்கும் போது, அதில் ஜாதிக்காய் மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற மூலிகைகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டால், மிகவும் நல்லது.

மிளகாய்
அளவுக்கு காரத்தை சாப்பிட்டால், எப்படி சுறுசுறுப்புடன் இருக்கிறோமோ, அதேப் போன்று காதல் வாழ்க்கையிலும் நன்கு செயல்பட முடியும்.


காபி
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் நல்லதல்ல. ஆனால் அளவாக குடித்து வந்தால், உடலில் எனர்ஜி அதிகரிக்கும். இதனால் காதல் வாழ்க்கையிலும் நீண்ட நேரம் இருக்க முடியும்.

சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கியது. இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடல் முழுவதும் சீராக ஓட வைக்கும்.

டார்க் சாக்லெட்
இனிப்பு இல்லாத டார்க் சாக்லெட் பாலுணர்ச்சியை தூண்டும் உணவுப் பொருட்களில் முதன்மையானது. எனவே இதனை தவறாமல் அவ்வப்போது சாப்பிடுங்கள்.

செர்ரி
செர்ரிப் பழங்களில், இரத்தக்குழாய்களை சுத்தம் செய்யும் ஆந்தோசையனின்கள் இருப்பதால், இதனை உட்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, காதலுணர்வு நீண்ட நேரம் இருக்கும்.

ஓட்ஸ்
ஒட்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, படுக்கையில் நன்கு எனர்ஜியுடன் இருக்கவும் உதவும்.

குங்குமப்பூ
குங்குமப்பூ உடலில் உள்ள வலிகளை குணமாக்குவதோடு, உடலை மிகவும் சென்சிடிவ்வாக மாற்றி, தொட்டாலே காதல் உணர்ச்சியானது பெருக்கெடுக்குமாறு மாற்றிவிடும்.

கடல் சிப்பி
கடல் சிப்பியில் ஜிங்க் சத்து அதிகம் இருப்பதால், ஆண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தி அதிகரிக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்தத்தின் அடர்த்தியை லேசாக்கி, உடலில் சீராக ஓடச் செய்யும்.


மாதுளை
மாதுளையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, அதில் நன்கு எனர்ஜியுடன் செயல்பட முடியும்.

கிராம்பு
கிராம்பு சாப்பிட்டால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, ஆண்குறிகளுக்கு இரத்தத்தின் அளவு அதிகரித்து, அளவுக்கு அதிகமான பாலுணர்ச்சியை ஏற்படுத்தும்.

நவதானியங்கள்
உடலுறவில் நல்ல சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமானால், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள நவதானிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீ குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள ரேடிக்கல்களை வெளியேற்றி, மனதை புத்துணர்ச்சி அடையச் செய்து, காதல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

சோம்பு
சோம்பு வியர்வையை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, பாலுணர்ச்சியை நீண்ட நேரம் நீட்டிக்கும்.

தண்ணீர் விட்டான் கிழங்கின் மகத்துவம்

மூலிகை வயாகரா வேண்டுமா?

சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை. அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர். ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் தண்ணீர் விட்டான் கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்.

வளரியல்பு

அல்லி குடும்ப(Lilliaceae) தாவரமான தண்ணீர் விட்டான் கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும். வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும் நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன. முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை. வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர்தன்மையும் கொண்டவை. வேர்கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன. நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணப்படுகிறது. வடமொழியில் சதாவரி என்று அழைக்கப்படுகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு.

தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.

மருத்துவ குணங்கள்.

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது. தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது. உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கசெய்கிறது. உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது. முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப்பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.

அழகுதாவரம் தண்ணீர்விட்டன் கிழங்கு.

தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை. சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்காவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது. அழகிற்காக வளர்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை.

தண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிப்பு.

நான் கூறப்போகும் ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி இடித்து சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்கரை கலந்து காலையில் பருக வேண்டும். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.

எள்ளின் மருத்துவக் குணங்கள் !!

எள்ளின் மருத்துவக் குணங்கள் !!

• படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.

• காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.

• 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.

• ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.

• நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும்.

பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.

ஆமணக்கு பயன்

ஆமணக்கு

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.

1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண் வலியின் போதும் கண்ணில் மண், தூசி விழுந்த போதும் ஓரிருதுளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

7. தோல் நீக்கிய விதையை மெழுகு போல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும். மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுபோட பல்வலி நீங்கும்.

ஆகாயத்தாமரை பயன்

ஆகாயத்தாமரை

நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையவை.

வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.

2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.

4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

அறுகம்புல் பயன்

குறுகலான நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை. ஆனைமுகக் கடவுளுக்குப் பூசனை மூலிகையாயப் பயன்படுவது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.

அறுகங்கட்டை உடல் தாதுவெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், தோகை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

1. கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.

2. கணுநீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

3. அறுகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கி காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர்த் தாரையில் உள்ள புண்ணால் நீர்க்கடுப்பு, சிறு நீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

4. புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.

5. வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச் சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்க்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு (தினவு), வேனல் கட்டி தீரும்.

6. அறுகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு: கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல்சீழ்பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்)

7. அறுகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம் இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

8. 1 கிலோ அறுகம் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு 1 லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து 1 லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்கராக்கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை(அ-றுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.

9. அறுகம் வேர், நன்னாரி வேர், ஆவாரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லியாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

அறுகீரை பயன்

தமிழகமெங்கும் கறிக்காகப் பயிரிடப்பெறும் ஒரு கீரை வகை. அரைக்கீரை என்ற பெயரில் தெருக்களில் விற்பனைக்கு வரும். இளந்தண்டுடன் கூடிய இலைகள் சமைத்துண்ணக் கூடியவை.

காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது.

கீரையை நெய் சேர்த்துச் சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக் காய்ச்சல், குளிர் சுரம், விஷசுரம், சன்னிபாதச் சுரம் (டைபாய்டு) ஆகியவை தீரும். எழுவகை உடற்சத்துக்களையும் பெருக்கி வலுவும் வனப்பும் உண்டாகும். பிடரி வலி, சூதகச் சன்னி ஆகியவை தீரும்.

அவரை பயன்

தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.

இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.

1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.

2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.

3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.

4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.

Sunday, December 22, 2013

அகத்திக்கீரை பயண்

வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.

1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

டீ - இயற்கை பானம்!

துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

பூக்களின் மருத்துவ பயன்கள்

இலுப்பைப் பூ
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

ஆவாரம் பூ
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அகத்திப்பூ
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

மகிழம்பூ
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

தாழம்பூ
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

வேப்பம்பூ
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பை பூ
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப்பூ
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

வெற்றிலை பயன்பாடு அதிகம்

நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை:

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட:

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்ரு
வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பட:

வெற்றிலை – 4

வேப்பிலை – ஒரு கைப்பிடி

அருகம் புல் – ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

விஷக்கடி குணமாக:

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

இருமல் குறைய:

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

அஜீரணக் கோளாறு அகல:

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தோல் வியாதிக்கு:


100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

தலைவலி நீங்க:


வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

தீப்புண் ஆற:

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

பிற உபயோகங்கள்:

வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.